கடையத்தில் வேளாண்மை அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
Sankarankoil King 24x7 |18 Dec 2024 10:16 AM GMT
வேளாண்மை அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் வளாகத்தில் அமைந்துள்ள பழைய வேளாண்மை துறை கட்டடம் அகற்றப்பட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.2 கோடி மதிப்பில் இன்று காலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒருங்கிணைந்த முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேர்மன் செல்வன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னிலையில் கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் முருகேசன் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story