மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள் மற்றும் காவலர்கள்
Madurai King 24x7 |18 Dec 2024 12:26 PM GMT
மதுரை அருகே காவல் துறையினர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (டிச.18)தமிழ்நாடு சிறப்பு காவல்படை VI பட்டாலியன் காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், அதன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து மகிழ்,அரசு,ஆலமரம் உள்ளிட்ட, 360 மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்வில் மாநில அளவில் பானை ஓவியம் மற்றும் கபடி, ஹாக்கி உள்ளிட்டவற்றில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை கொடுத்து பாராட்டியும் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்தும் மாணவர்களிடம் பேசினர், மேலும் நிகழ்வில் பள்ளி மாணவன் பாடிய சுகாதாரம் குறித்த நாட்டுப்புற பாடல் மிகுந்த கைதட்டல் ஆரவாரத்துடன் ரசித்தனர் .இதில் adsp சாசிதா, dsp மான்சிங், சுந்தர் மற்றும் தலைமை ஆசிரியர் தண்ணயிரமூர்த்தி, ஊராட்சி தலைவர் இளவரசன், கவுன்சிலர் முருகன், மற்றும் ஆசிரியர்கள் மாடகுளம்- விஜயகுமார், பள்ளியின் முன்னாள் மாணவர்களும் பங்கேற்றனர்.
Next Story