தமிழில் பெயர் பலகை தமிழ் வளர்ச்சித் துறை வணிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி !

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி வணிகர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் டிசம்பர் 19 வியாழக்கிழமை நாமக்கல்லில் நடைபெற உள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் (2024-2025) நிகழ்ச்சிகள் டிசம்பர் 18 முதல் டிசம்பர் 27 வரை நடைபெறுகிறது.இதையொட்டி (டிசம்பர்- 19) வியாழக்கிழமை, மதியம் 3 மணிக்கு, நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் (நல்லிபாளையம் காவல் நிலையம் அருகில்) தொழிலாளர் உதவி ஆணையர் சி.முத்து தலைமையில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பொ.பாரதி முன்னிலையில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி வணிகர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... தமிழில் பெயர் பலகை வைக்கப்படாத வணிக நிறுவனங்களுக்கு தமிழக அரசு அபராதம் விதிக்க தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பாக நடைபெறும் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் வணிகர்கள் அவசியம் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story