ராசிபுரம் பகுதியில் உங்களைதேடி உங்கள் ஊரில் ஆட்சியர் பங்கேற்று ஆய்வு..
Rasipuram King 24x7 |18 Dec 2024 3:48 PM GMT
ராசிபுரம் பகுதியில் உங்களைதேடி உங்கள் ஊரில் ஆட்சியர் பங்கேற்று ஆய்வு..
ராசிபுரம் அரசுபோக்குவரத்துபனிமனையில் மட்டுமே 28.லட்சருபாய் வரிபாக்கிஉள்ளது அதிகாரிகள் கூறியதை கேட்டதும் அதிர்ந்துபோன ஆட்சியர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உங்களைதேடி உங்கள் ஊரில் என்ற நிகழ்வு நடைபெற்றது இதில் காலைமுதலே மாவட்ட ஆட்சியர் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான நாமகிரிபேட்டை, சீராப்பள்ளி,தொ.ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியர் நேரில் சென்று ஒவ்வொரு பகுதிகளிலும் அடிப்படைவசதிகள் உள்ளதா அரசின்நலத்திட்டஉதவிகள் பொதுமக்களுக்கு கிடைக்கபெறுகிறதா எனவும் ஆய்வு செய்தார் பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்றுகொண்டு அதிகாரிகளிடம் ஆய்வுகூட்டம் நடத்தினார் அப்போதுவருவாய்துறை, ஆதிராவிடர் நலத்துறை, கூட்டுறவுதுறை, வேளாண்மைதுறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளிடம் ஆய்வுகூட்டம் நடத்தினார் ஒவ்வொருதுறைஅதிகாரிகளிடம் கேள்விமேல் கேள்விகேட்டு துளைத்தெடுத்தார் அப்போது வரிபாக்கியினை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனகூறியபோதுஅதிகாரிஒருவர் எழுந்து ராசிபுரம் அரசுபோக்குவரத்து பனிமனையில் மட்டும் இதுவரை 28லட்சம் வரிபாக்கிஉள்ளது கேட்டாலும் கட்டமால் உள்ளனர் அரசுபோக்குவரத்துதுறை அதிகாரிகள் வந்துள்னரா எனகேட்டபோது அவர்கள் யாரும் வரவில்லை எனதெரிவித்தனர் இதனை கேட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா அதிர்ந்து போனார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story