ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்க பொதுநல அமைப்பினர் கோரிக்கை
Komarapalayam King 24x7 |18 Dec 2024 4:43 PM GMT
குமாரபாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்க பொதுநல அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எடப்பாடி சாலையில் காவேரி நகர் பாலம் அருகில் ரவுண்டான அமைத்து சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு சாலை அகலப்படுத்தும் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலைகளை அமைத்து தங்கள் கடமைகளை முடிந்தது என தற்காலிகமாக பணிகளை செய்து வருகின்றனர் எனவே குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து காவிரி நகர் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பின்னர் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அனைத்து பொதுநல கூட்டமைப்புகள் சார்பில் இன்று காலை 08:00 மணியளவில் காவேரி நகர் பாலம் அருகில் மறியல் நடைபெற உள்ளது இதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம், என பொதுநல அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story