விழுப்பணங்குறிச்சி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும்
Ariyalur King 24x7 |18 Dec 2024 8:06 PM GMT
விழுப்பணங்குறிச்சி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும் என்ன கோரிக்கை விடுத்தனர்.
அரியலூர், டிச.19: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள விழுப்பணங்குறிச்சி கிராம மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: பாட்சா நகர் சாலையை சீர் செய்ய வேண்டும். விழுப்பணங்குறிச்சியில், இருளர் இன மக்கள் வழிபடும் கருப்புசாமி கோயில் செல்லும் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும். டிச.26 ஆம் தேதி கட்சியின் 100 ஆம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவது, ஜனவரி 26}இல் தருமபுரியில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில், திருமானூரில் இருந்து கட்சியினர் திரளாக கலந்து கொல்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு அக்கட்சியின் நிர்வாகி சக்திவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் கனகராஜ் முன்னிலை வகித்தார். கிளைச் செயலர் தட்சணாமூர்த்தி அறிக்கை வாசித்தார்.மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினார். நிர்வாகிகள் முருகேசன், பால்ராஜ், அமுதா, பால்சாமி, பாண்டியராஜன், கலியமூர்த்தி, வாசுகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story