குற்றால அருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குற்றால அருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
அருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ள பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் இ.ஆ.ப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து குற்றாலத்தில் குளிக்க அனுமதி கோரி கோரிக்கைகள் வரப்பெற்றதை தொடர்ந்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்தும், பொதுமக்கள் குற்றால அருவியில் ஓரமாக நின்று குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே. கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இதில் நேரில் சென்று குற்றால அருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story