நீதித்துறை மற்றும் காவல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது

நீதித்துறை மற்றும் காவல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
நீதித்துறை மற்றும் காவல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்
தென்காசி மாவட்ட தென்காசி நீதிமன்றத்தில் வைத்து மாவட்ட நீதிபதி ராஜவேல் அவர்களின் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் முன்னிலையில் தென்காசி மாவட்ட நீதித்துறை மற்றும் காவல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகியவை விரைந்து முடிப்பது குறித்தும், நீதிமன்றத்தில் வழக்கின் சாட்சிகளை விரைவில் ஆஜர் படுத்துதல், வழக்குக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தென்காசி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கதிரவன், தென்காசி நீதித்துறை நடுவர் பொன்பாண்டியன், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரகு, அரசு குற்றவியல் வழக்கறிஞர் மருதப்பன், அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் சாலமோன் ஜேக்கப், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வேணுகோபால், ரமேஷ், துணை காவல் கண்காணிப்பாளர்கள் வெங்கடேஷ், பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர்,ஜெயபால் பர்ணபாஸ், மீனாட்சிநாதன், தமிழினியன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story