இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
நீதிமன்றம்
தஞ்சாவூர் மாவட்டம், ராவுசாப்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார், இவர் மளிகை கடை வைப்பதற்காக, கடந்த 2020ஆம் ஆண்டு பிப்.29ஆம் தேதி, தனது வீட்டின் பத்திரங்களை அடமானம் வைத்து, ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் நிறுவனத்தில் 9.37 லட்சம் ரூபாயை, கடன் பெற்றார். கடனுக்கு காப்பீடு பிரிமியமாக 23,172 ரூபாயை பிடித்தம் செய்து, ஐ.சி.ஐ.சி.ஐ இன்சூரன்ஸ் நிறுவனத்தில், பைனான்ஸ் நிறுவனம் செலுத்தியது. இந்நியைில், மளிகைக்கடை தொழிலில் நஷ்டம் ஏற்பட, கடன் தொகையை முறையாக செலுத்த முடியதால், ரமேஷ்குமாருக்கும் அவரது மனைவி சித்ராவுக்கு ஏற்பட்ட தகராறில், கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்.15ம் தேதி ரமேஷ்குமார் தற்கொலை செய்துக்கொண்டனர்.   தொடர்ந்து, சித்ரா தனது கணவர் கடன் வாங்கிய போது, எடுத்திருந்த இன்சூரன்ஸ் தொகையை கடன் கணக்கில் வரவு வைத்து, கடனுக்கு ஈடாக அடமானம் செய்த அசல் ஆவணங்களை திருப்பி வழங்கக் கோரி பைனான்ஸ் நிறுவனத்தை அனுகினார். ஆனால், பைனான்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம், கடன் தொகை 14 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், இதில், ஏழு லட்சம் ரூபாய்க்கு மட்டுமே ரமேஷ்குமார் இன்சூரன்ஸ் செய்து இருந்ததாகவும், இன்சூரன்ஸ்  இழப்பீடாக 6.68 லட்சம் ரூபாயை வரவு வைக்கப்பட்டு மீதக் கடன் தொகை  7 லட்சத்து 95 ஆயிரத்து 897 ரூபாயை செலுத்த வேண்டும். இல்லையெனில் வீட்டினை ஜப்தி செய்வோம் என மிரட்டியுள்ளனர்.   இது குறித்து சித்ரா, தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனுத்தாக்கல் செய்தார். புகாரினை விசாரணை செய்து, கடன் நிலுவைத்தொகையை இன்சூரன்ஸ் தொகை மூலம் கழித்துக்கொண்டு, அடமானம் வைத்த அசல் ஆவணங்களை, 30 நாட்களுக்குள் திரும்ப வழங்க வேண்டும். மேலும், சேவைக்குறைபாடு மற்றும் முறையற்ற வணிக முறைச்செயல்பாடுகளின் காரணமாக, சித்ராவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுத்தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் சேர்த்து ஒரு மாதக்காலத்திற்குள் வழங்க வேண்டும் என ஆணையத்தலைவர் சேகர், மற்றும் உறுப்பினர் வேலுமணி ஆகியோர் வியாழக்கிழமை தீர்ப்பு அளித்தனர்.
Next Story