அரியலூர் அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு முகாம்.
Ariyalur King 24x7 |19 Dec 2024 3:00 AM GMT
அரியலூர் அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.
அரியலூர், டிச. 19 - அரியலூர் மாவட்டம் கடுகூர் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை அரியலூர் கோட்ட உதவி இயக்குனர் முருகேசன் தலைமை தாங்கினார்.இந்த முகாமில் கால்நடை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.கடுகூர், அயன் ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மொத்தம் 89 விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.அதன்படி மொத்தம் 9 எருமை மாடுகள் உட்பட 600 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது இதில் மாடு வளர்ப்போர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story