தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில், ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை சமூகநீதி கொள்கைக்கு எதிராகவும், பெண்கள் நலனுக்கு எதிராகவும் ரூபாய் 3000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ள தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து, தமிழக முழுவதும் நேற்று மாலை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் தங்கதுரை, மாவட்ட செயலாளர் சுந்தரம் உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். வருவாய் கிராம ஊழியருக்கு இணையான சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூபாய் 6 ஆயிரத்து 750 அகவிலை படியுடன் வழங்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் தகுதி உள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story