ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பு திமுக நகர் கழகத்தின் சார்பில் முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டம் வடக்கு நகர் கழகத்தின் சார்பில் திமுக நகர் செயலாளரும் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவருமான ஆர். கே. கார்மேகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ரமேஷ் கண்ணா மற்றும் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இன்பாரகு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சம்பத், மாநில விவசாய அணி துணை தலைவர் குணசேகரன் வர்த்தக அணி திருமாறன்,நகர்மன்ற கவுன்சிலர்கள் காளிதாஸ், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், ஜாவா என்ற முகமது ஜஹாங்கீர், மற்றும் 25 ஆவது வார்டு திமுக செயலாளர் செம்பா என்ற சதீஷ் சர்மா, கவுன்சிலர் ஜெ. ஜெயராமன், ஆடிட்டர் கார்த்திக் ராஜா, மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story