நத்தக்காடையூர் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Tiruppur King 24x7 |19 Dec 2024 7:38 AM GMT
காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
காங்கேயம் அருகே நத்தக்காடையூரில் உள்ளது பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி. இந்த பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2019 - 2023 கல்வி ஆண்டில் பயின்ற மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நந்தகுமார் ஐஆர்எஸ், வருமான வரி ஆணையர், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அகமதாபாத், இந்திய அரசு அவர்கள் பங்கு பெற்று பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பெரு நிறுவன முதலாளிகள், பணியாளர்களுக்கான அடிப்படை கடமைகள் மற்றும் உரிமைகள் பற்றி பேசினார். மேலும் ஒரு தனி மனிதனின் அடையாளத்தை மேம்படுத்த கல்வி இன்றி அமையாதாகும் என்ற கருத்தினை எடுத்துரைத்தார். ஒரு மரமானது எவ்வாறு பல பரிணாமங்களுடன் வளர்ந்து கொண்டு செல்கிறதோ அதுபோல் இன்று பட்டம் பெரும் மாணாக்கர்கள் தங்கள் வாழ்வில் பல தொழில்நுட்பங்களையும், நுண்ணறிவினையும் பெற்று இந்த சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார். கௌரவ விருந்தினர் ஸ்ரீராம் சிஏ, துணைத் தலைவர் மெட்டா சேஜ் அலையன்ஸ் வியூக ஆலோசகர் அவர்கள் தனது உரையில் பட்டம் பெற்ற மாணவர்களை பாராட்டியும், எந்த துறையில் பணிபுரிகின்றிர்களோ அந்தத் துறையில் முதன்மையாக விளங்க வேண்டும். அதற்கு புதிய நுண்ணறிவு திறன்களை கற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பட்டமளிப்பு விழாவினை வெங்கடாசலம் காங்கேயம் கல்வி குழும செயலாளர் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் ராம்குமார் சிறப்பு விருந்தினர்கள், கல்லூரியின் நிர்வாகிகள், காங்கேயம் கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்களை வரவேற்று கல்வி ஆண்டிற்கான நிறுவனத்தின் சாதனைகளை வாசித்தார். அதனை துறை தலைவர்களும், பட்டம் பெற உள்ள மாணவர்களின் பெயரை வாசிக்க மாணவர்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளிடம் இருந்து பட்டங்களை பெற்றனர். மேலும் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவம் படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து பட்டதாரி உறுதிமொழியை கல்லூரி முதல்வர் முனைவர் ராம்குமார் அவர்கள் வாசிக்க பட்டதாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காங்கேயம் கல்வி குழுமங்களின் நிறுவனங்களின் நிர்வாகிகள், தலைவர் ராமலிங்கம், செயலாளர் வெங்கடாசலம் தாளாளர் ஆனந்த வடிவேல் பொருளாளர் பாலசுப்ரமணியம் மற்றும் காங்கேயம் கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மகேந்திர கவுடா இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு பட்டங்களைப் பெற்ற தருணத்தை மகிழ்வாக கொண்டாடினர்.
Next Story