அதிமுக முன்னாள் கவுன்சிலர் கணவருடன் த.வெ.க.வில் ஐக்கியம்!
Thoothukudi King 24x7 |19 Dec 2024 8:05 AM GMT
தூத்துக்குடியில் மாநகராட்சி முன்னாள் அதிமுக கவுன்சிலர் தனது கணவருடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
தூத்துக்குடியில் மாநகராட்சி முன்னாள் அதிமுக கவுன்சிலர் தனது கணவருடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் அதிமுக கவுன்சிலர் சர்மிளா அருள்தாஸ், அவரது கணவரான தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு சங்கம் துணைத் தலைவர் அருள்தாஸ் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்கள். அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆகனஸ் சால்வை அணிவித்து உறுப்பினர் கார்டுகளை வழங்கினார். இதுபோல் முத்தையாபுரம், சூசைநகர், சண்முகபுரம், மாப்பிள்ளையூரனி, பழையக்காயல் போன்ற பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட 200 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் சால்வை அணிவித்து வரவேற்று உறுப்பினர் கார்டுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story