ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் மத்திய அமைச்சர் அமித்ஷா வை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
Ariyalur King 24x7 |19 Dec 2024 8:05 AM GMT
ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் மத்திய அமைச்சர் அமித்ஷா வை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர், டிச.19- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசியதை கண்டித்து ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று கண்டன கோஷங்கள் எழுப்பியவாறே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சட்ட திட்ட திருத்தக் குழு இணைச் செயலாளர் சுபா சந்திரசேகர், சி ஆர் எம் பொய்யாமொழி உள்ளிட்ட திமுகவினர் பலரும் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
Next Story