சுடுகாட்டை ஆக்கிரமித்த திமுக நிர்வாகி பொதுமக்கள் அவதி
Tiruppur King 24x7 |19 Dec 2024 8:30 AM GMT
காங்கேயம் வெள்ளகோவில் அருகே சுடுகாட்டை ஆக்கிரமித்த திமுக நிர்வாகி - பொதுமக்கள் புகார் - நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் - வழக்கு தொடர போனில் கூறிய பொதுப்பணித்துறை அதிகாரி உரையாடல் வைரல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள உத்தமபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்து கம்பி வேலி போட்டு கொண்டதாக கடந்த 6 மாதங்களாக புகார். வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு. நாளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகையை ஒட்டி போராட்டத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் அறிவிப்பு. பொது மக்களிடம் செல்போனில் பேசிய பொதுப்பணித்துறை அதிகாரி எந்த அதிகாரிகளும் உங்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள் நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யுங்கள் எனக் கூறிய உரையாடல் சமூக வலைதளங்களில் வைரல். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேர்முக உதவியாளர் செல்லமுத்து மற்றும் திமுக நிர்வாகிகள் உடந்தையாக இருப்பதாகவும் தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய நேரில் சென்ற போது திமுக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து இடையூறு செய்ததாக குற்றச்சாட்டு. மேலும் இனி எங்கள் ஊரில் யாராவது இறந்தால் எங்கு கொண்டு சென்று அடக்கம் செய்வது என்று தெரியவில்லை என பொதுமக்கள் வேதனை. காங்கேயம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் 4 சமுதாய மக்கள்கள் காலங்காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டை திமுக நிர்வாகிகள் இரவோடு இரவாக சுடுகாட்டில் உள்ள சமாதிகளை ஜே.சி.பி இயந்திரம் துணையுடன் சரி சமமாக சமாதிகளை அப்புறப்படுத்தி 3.5 சென்ட் உள்ள சுடுகாட்டை கம்பி வேலிகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து அங்கு குடியிருந்து வரும் 40 மேற்பட்ட சமுதாய மக்கள் காங்கேயம் தாசில்தார் மற்றும் தாராபுரம் கோட்டாட்சியர், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் 15க்கும் மேற்பட்ட முறை புகார்கள் தெரிவித்துள்ளனர், மேலும் பொதுமக்கள் பயன்படுத்திய சுடுகாடு உள்ள இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது எனவும், இந்த இடமானது 1980 க்கு மேல் இது பொதுப்பணி துறைக்கு சொந்தமானதாக ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்ட ஆண்டுகள் இதே இடத்தில் அவர்களது முன்னோர்களது சடலங்களை புதைத்துள்ளதாகவும் ஆனால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இந்த இடம் 1980 ஆண்டுக்கு பின்னரே இணைக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த இடத்தை இதே பகுதியை சேர்ந்த திமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலிகள் அமைத்து சொந்தம் கொண்டாடி வருவதாக 15 க்கு மேற்பட்ட முறை புகார் கொடுத்தும் எந்த ஒரு அரசு அதிகாரிகளும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர். மேலும் இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் திமுக நிர்வாகி என்பதால் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களின் உதவியாளர் செல்லமுத்து மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்த இடமானது பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என தெரிவித்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரி பாஸ்கர் அவர்களிடம் இதுகுறித்து இந்த ஊர் பொதுமக்களான ஜெகதீஷ் கேட்ட போது எந்த ஒரு அரசு அதிகாரிகளும் உங்களுக்கு உறுதுணையாக செயல்பட மாட்டார்கள் எனவும் இதனால் நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதன் மூலமாக தீர்வு காண வேண்டும் என செல்போனில் பேசிய உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றது. மேலும் சுடுகாட்டை பொதுமக்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால் நாளை திருப்பூர் பகுதிக்கு பல்வேறு நிகழ்ச்சிக்கு வரும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து முறையிடப் போவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சுடுகாடு பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய வந்த காங்கேயம் வட்டாட்சியர் மோகன், காங்கேயம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மாயவன் மற்றும் வெள்ளகோயில் காவல் ஆய்வாளர் ஞானபிரகாஷ் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்களிடம் வெள்ளகோவில் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீண்டும் ஒரு முறையாக அளவீடு செய்ய வேண்டும் என தெரிவித்ததை தொடர்ந்து இன்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது இந்த இடத்தில் யார் யாரெல்லாம் அடக்கம் செய்துள்ளீர்கள் அவர்களது இறப்புச் சான்றுகளை வழங்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு உறுதுணையாக அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்ததாக கூறுகின்றனர். மேலும் 3.5 சென்டுள்ள இந்த சுடுகாடு உள்ள இடத்தை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு செய்தது ஒரு புறம் இருந்தாலும தற்போது இந்தப் பகுதியைச் சேர்ந்த யாராவது ஒருவர் இறப்பு ஏற்பட்டால் எங்கு கொண்டு போய் அடக்கம் செய்வது என்று தெரியவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் இடத்தை ஒதுக்கித் தர முடியாத சூழலில் இறந்தவரின் சடலத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவரின் வீட்டின் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story