அமித் ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அமித் ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடியில் சட்ட மேதை அம்பேத்கர் குறித்து இழிவாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கார் திருவுருவச் சிலை முன்பு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம்
நேற்று பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்ட மேதை அம்பேத்கர் குறித்து இழிவாக பேசியதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டி அமளியில் ஈடுபட்டன மேலும் அமித்ஷா பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ர் கடும் கண்டனம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் எஸ் சுரேஷ் குமார், திமுக மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், திமுக வட்டச் செயலாளர்கள் கதிரேசன், வழக்கறிஞர் சதீஷ்குமார், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோர்ட் ராஜா, மாவட்ட தொழிற்சங்க மின்வாரிய அணி தலைவர் பேச்சிமுத்து, உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story