அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்...!
Namakkal King 24x7 |19 Dec 2024 9:21 AM GMT
ஆர்ப்பாட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் (டிசம்பர் -19) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.அதேபோல, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும்,பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி.வழிகாட்டுதலின் பேரில்,நாமக்கல்- மோகனூர் சாலை அண்ணா சிலை அருகில் நாமக்கல் மாநகராட்சி மேயர் து.கலாநிதி,மாநகராட்சி துணை மேயரும், நாமக்கல் கிழக்கு நகர செயலாளருமான செ.பூபதி. நாமக்கல் தெற்கு நகர செயலாளர் ராணா ஆர்.ஆனந்த், நாமக்கல் மேற்கு நகர செயலாளர் அ.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் நலங்கிள்ளி, மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் இராணி, பொதுக் குழு உறுப்பினர் மாயவன், கிருபாகரன், ராஜவேல், முரளி, நாசர்பாஷா, கலைவாணன் உள்பட கிழக்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய பகுதி, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னணியினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story