அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஜெயங்கொண்டம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஊர்வலம்
Ariyalur King 24x7 |19 Dec 2024 9:52 AM GMT
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஜெயங்கொண்டம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஊர்வலம் நடைபெற்றது
அரியலூர், டிச.19- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசியதை கண்டித்து ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று கண்டன கோஷங்கள் எழுப்பியவாறே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் சட்ட திட்ட திருத்தக் குழு இணைச் செயலாளரா சுபா.சந்திரசேகர், தேர்தல் நகர பொறுப்பாளர் சி.ஆர்.எம்.பொய்யாமொழி, ஒன்றிய செயலாளர் தனசேகர், பாலசுப்பிரமணியன், நகர அவை தலைவர் ஞானபிரகாசம், நகர துணை செயலாளர் முரசொலிகுமார், செந்தில்குமார், நிர்மலா செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் ராஜமாணிக்கம், கொளஞ்சியப்பா, பிரபாகரன் மற்றும் பூ.ரெ. கண்ணன், விஜயன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.முடிவில் பொருளாளர் வீனஸ் ரமேஷ் நன்றி கூறினார்
Next Story