திருவாரூர் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக கோயில் மனையில் குடியிருப்போருக்கு ஆதரவாக திருவாரூர் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனைத்து வணிக சங்கங்களில் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது போன்று 25 ஆண்டுகளுக்கு சேர்த்து வாடகை செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் அவர்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை கையில் எடுத்துள்ளது. இந்த முடிவை கைவிட வலியுறுத்தியும் இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு கோயில் மனையில் குடியிருப்போருக்கு உரிய தீர்வு வழங்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். திருவாரூர் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஆரூர் .ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை.மாலி ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.முருகையன், நகர செயலாளர் கேசவராஜ் மற்றும் திருவாரூர் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனைத்து வணிக சங்கங்களில் கூட்டமைப்பு நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story