அரியலூரில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி புகார் அளித்து பலன் அளிக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு.

அரியலூரில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி  புகார் அளித்து பலன் அளிக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு.
அரியலூரில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி புகார் அளித்து பலன் அளிக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர், டிச.19- அரியலூர் மாவட்டம் செட்டிதிருக்கோணம் புது காலனியை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் 2 சென்ட் வீட்டு மனை இலவசமாக வழங்கப்பட்டது. இதில் வீடு கட்டி தனது குடும்பத்தினருடன் லெட்சுமி வசித்து வருகின்றார். இந்நிலையில் லெட்சுமிக்கு சொந்தமான இடத்தில், அரை சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார்.தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி, கிராம நிர்வாக அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் லெட்சுமி, பல முறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மனமுடைந்த லெட்சுமி, தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார்.  அலுவலகம் முன்பு திடீரென லெட்சுமி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், லெட்சுமியிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி, அவர் மேல் தண்ணீரை ஊற்றி  காப்பாற்றினர். பின்னர் லட்சுமியை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story