அமித்ஷாவை கண்டித்து திருச்செங்கோட்டில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

அமித்ஷாவை கண்டித்து திருச்செங்கோட்டில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
பாராளுமன்றத்தில்இந்திய அரசியல் அமைப்பு குழு தலைவர் சட்ட மேதை அம்பேத்கரைஅவமதித்து பேசியஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர்அமித்ஷாவை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், திருச்செங்கோடு நகர செயலாளர் கார்த்திகேயன், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில்நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு,மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன்நகர மன்ற உறுப்பினர்கள் ராதா சேகர் மனோன்மணி சரவண முருகன்,டிஎன் ரமேஷ், தாமரைச்செல்வி மணிகண்டன் செல்வி ராஜவேல் செல்லம்மாள் தேவராஜன் சினேகா ஹரிகரன் ராஜா அடுப்பு ரமேஷ்ஆகியோர் உள்ளிட்ட மாவட்ட திமுக நிர்வாகிகள்நகர பிரமுகர்கள்மகளிர் அணி தொண்டர் அணி மாணவர் அணி அமைப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
Next Story