தென்காசியில் குடிநீர் தண்ணீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்
Sankarankoil King 24x7 |19 Dec 2024 11:15 AM GMT
காலி குடங்களுடன் குடிநீர் தண்ணீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்
தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள வெல்கம் குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிதண்ணீர் முறையாக வருவதில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் இன்று காலை திடீரென்று நகராட்சி முன்பு காலி குடங்களுடன் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே நகராட்சி அலுவலர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் முறையாக குடிதண்ணீர் அந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் என கூறியிருந்தார். பேச்சுவார்த்தைக்குப் பின்பு அப்பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story