டாக்டர் அம்பேத்கரை அவமதித்த பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
Thiruvarur King 24x7 |19 Dec 2024 12:24 PM GMT
உள்துறை அமைச்சர் அமித்சாவை கண்டித்து திருவாரூர் நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
பாஜக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசிய கருத்தினை கண்டித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்து முழக்கம் எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுக நகர ஒன்றிய பேரூர் கழக சார்பணி நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story