திருத்துறைப்பூண்டி அருகே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Thiruvarur King 24x7 |19 Dec 2024 12:29 PM GMT
டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியா கூட்டணி கட்சியினர் அமித்ஷா பேச்சை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சித்தமல்லி கிராமத்தில் அம்பேத்கர் சிலை முன்பு திமுக சார்பில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ .கே .எஸ். விஜயன் தலைமையில் கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பால ஞானவேல் தெற்கு ஒன்றிய செயலாளர் வி எஸ் ஆர் தேவதாஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story