நாமக்கல்லில் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் மலரஞ்சலி!
Namakkal King 24x7 |19 Dec 2024 12:38 PM GMT
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகனின் 102 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார், அறிவிப்பிற்கு இணங்க இனமான பேராசிரியர் 102-வது பிறந்த நாளினை கொண்டாடும் வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் கழக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு மாநகராட்சி மேயர் து.கலாநிதி,மாநகராட்சி துணை மேயரும், நாமக்கல் கிழக்கு நகர செயலாளருமான செ.பூபதி, நாமக்கல் தெற்கு நகர செயலாளர் ராணா ஆர்.ஆனந்த், நாமக்கல் மேற்கு நகர செயலாளர் அ.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் பேராசிரியர் அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் இராணி,பொதுக் குழு உறுப்பினர் மாயவன், கிருபாகரன், ராஜவேல், முரளி,நாசர்பாஷா, கலைவாணன்,நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள். பிரதிநிதிகள், மாநகராட்சி உறுப்பினர்கள்மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story