சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பு அறன் திமுக அரசு வடுகர்பாளையத்தில் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ பேச்சு.*

சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பு அறன் திமுக அரசு வடுகர்பாளையத்தில் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ பேச்சு.*
சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பு அறன் திமுக அரசு வடுகர்பாளையத்தில் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ பேசினார்.
அரியலூர், டி.19- சிறுபான்மை இன மக்களை பாதுகாக்கும் கட்சி திமுக அரியலூர் மாவட்டத்திற்கு பல மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு தான் அயராது உழைப்பவர்கள் திமுக எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தான். மக்களுக்கான திட்டங்களை அதிமுக ஆட்சி கொடுக்கவில்லை, திமுக ஆட்சி தான் கொடுத்ததாக ஜெயங்கொண்டம் எம் எல் ஏ பேசினார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வடுகர்பாளையம் கிராமத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சார பொது கூட்டம் .ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கவிிஞர் சிவமுத்துவளவன், மில்லர்மண்டேலா ஆகியோர் திமுக செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் பேசினார். ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் பேசுகையில் சிறுபான்மையின மக்களை பாதுகாக்கும் கட்சி திமுக அரியலூர் மாவட்டத்திற்கு பல மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு தான் அயராது உழைப்பவர்கள் திமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் தான். மக்களுக்கான திட்டங்களை அதிமுக ஆட்சி கொடுக்கவில்லை திமுக ஆட்சி தான் கொடுத்தது, திட்டங்கள் அனைத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்து வருவதாகவும், மேலும் இந்தப் பகுதியில் நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைத்த அரசு திமுக அரசு தான், மேலும் கொரோனா காலகட்டத்தில் சிகிச்சை பெரும் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கே நேரில் சென்று சந்தித்தது நலம் விசாரித்தவர் தற்போதைய தமிழக முதல்வர் தான் என ஜெயங்கொண்டம் எம் எல் ஏ பேசினார். கூட்டத்தில் கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் டேவிட், நிர்வாகிகள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தர்மதுரை, மாவட்ட மகளிர் தொண்டரணி தலைவர் ராணி, மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் பாக நிலை முகவர் வீரபாபு நன்றி தெரிவித்தார்.
Next Story