.கொல்லாபுரத்திலிருந்து காட்டுமன்னார்குடி -முட்டம் வரை சாலை வசதி பஸ் வசதி மற்றும் பொன்னேரியை தூர்வாரி பாசன வசதி ஏற்படுத்த நடவடிக்கை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் உறுதி

.கொல்லாபுரத்திலிருந்து காட்டுமன்னார்குடி -முட்டம் வரை சாலை வசதி பஸ் வசதி மற்றும் பொன்னேரியை தூர்வாரி பாசன வசதி ஏற்படுத்த நடவடிக்கை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன்  உறுதி
கொல்லாபுரத்திலிருந்து காட்டுமன்னார்குடி -முட்டம் வரை சாலை வசதி பஸ் வசதி மற்றும் பொன்னேரியை தூர்வாரி பாசன வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உதயநிதி பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் சாதனை விளக்க கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் உறுதியளித்தார்.
.அரியலூர், டிச.20- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில், கொல்லாபுரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதியின்  பிறந்தநாள் விழா மற்றும் திமுக  திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம், ஒன்றிய  செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.முன்னதாக மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பால.பிரவின்ராஜ் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் தலைமை கழக தேர்தல் பணிக்குழு செயலாளர்,கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் வேலூர் G.ரமேஷ், தலைமை கழக இளம் பேச்சாளர் பீ.ஜோவி அபர்னா, திமுக சட்ட திட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பேசினர். கூட்டத்தில்  ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் பேசும்போது :- இந்தப் பகுதியில் நிறைய திட்டங்கள் மற்றும் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதாகவும், மேலும்  இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் அமைத்ததாகவும், மேலும் இப்பகுதி மக்கள் கோரிக்கையாக கொல்லாபுரத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தவும், ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் இருந்து கொல்லாபுரம் வழியாக காட்டுமன்னார்குடி முட்டம் வரை செல்லும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தி தரவும்,  நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதி அளித்தார் மேலும் பொன்னேரியை தூர்வாரி பாசன வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எனவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்கள் நலத்திட்ட பணிகளை செய்து வரும் திமுக அரசிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஸ்டாலினை மீண்டும் முதல்வராக வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெல்லும், அதற்கு சாட்சி அனைத்து பகுதிகளிலும் திமுக அரசு மக்கள் நலத்திட்ட பணிகளை செய்துள்ளதாகவும் எம்எல்ஏ பெருமிதத்துடன் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் இராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கணேசன் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய  நிர்வாகிகள் உள்ளிட்ட, பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். முடிவில் கிளை செயலாளர் திருஞானசம்பந்தம் நன்றி தெரிவித்தார்.
Next Story