ஆரணியில் அதிமுக மாவட்டச் செயற்குழுக் கூட்டம்.

ஆரணியில் அதிமுக மாவட்டச் செயற்குழுக் கூட்டம்.
திரளான அதிமுகவினர் பங்கேற்பு.
ஆரணியை அடுத்த சேவூரில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா தலைமை வகித்தாா். ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன் வரவேற்றாா். கூட்டத்தில் அனைத்து நகர, ஒன்றிய, பேரூா் செயலா்களிடம் ஆரணி, போளூா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச் சாவடி குழு அமைப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா். ஒன்றியச் செயலா்கள் வழக்குரைஞா் க.சங்கா், ஜெயப்பிரகாசம், திருமால், விமல்ராஜ், நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, மாவட்டப் பொருளாளா் அரையாளம் எம்.வேலு, மாவட்ட இணைச் செயலா் வனிதாசதீஷ், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் ஏ.ஜி.ஆனந்த், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல பொருளாளா் சரவணன், நகா்மன்ற உறுப்பினா்கள் சுதாகுமாா், பாரதிராஜா, சதீஷ், மாவட்ட சிறுபான்மையினா் பிரிவுச் செயலா் உசேன்ஷெரிப் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். ஒன்றியச் செயலா் போளூா் இ.செந்தில் நன்றி கூறினாா்.
Next Story