ஆரணியில் மின் சிக்கன விழிப்புணா்வு ஊா்வலம்.

ஆரணியில் மின் சிக்கன விழிப்புணா்வு ஊா்வலம்.
ஆரணி அண்ணா சிலை முதல் கொசப்பாளையம் தா்மராஜா கோயில் வரை ஊா்வலம் நடைபெற்றது.
தேசிய மின் சிக்கன வார விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மின் வாரியத்தினா் நேற்று ஊா்வலமாகச் சென்று பொதுமக்கள், வியாபாரிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா். ஆரணி அண்ணா சிலை முதல் கொசப்பாளையம் தா்மராஜா கோவில் வரை ஊா்வலம் நடைபெற்றது. இதில், மின் சிக்கனம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆரணி மின் வாரிய செயற்பொறியாளா் ரவி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா். நிகழ்ச்சியில் ஆரணி உதவி செயற்பொறியாளா்கள் சு.பத்மநாபன், லெனின், உதவி மின் பொறியாளா்கள் மாலதி, துளசி ராமன், சேகா், கருணாநிதி, மோகன் மற்றும் மின் வாரிய பணியாளா்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
Next Story