மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
Dharmapuri King 24x7 |20 Dec 2024 12:47 AM GMT
சட்ட மேதை அம்பேத்கர் அவமதித்து மத்திய அமைச்சர் அமைச்சரை கண்டித்து தர்மபுரி நகர திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்திய அரசியலைமப்பு சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைக் கண்டித்து தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று (19.12.2024) வியாழக்கிழமை தருமபுரி BSNL அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்,தர்மபுரி நகர கழக செயலாளர் நாட்டான் மாது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகி செந்தில் குமார் மாவட்ட கழக நிர்வாகிகள் தங்கமணி ரேணுகாதேவி ஒன்றிய செயலாளர்கள் AS.சண்முகம், DL.காவேரி வைகுந்தம், மல்லமுத்து செல்வராஜ், கருணாநிதி, மடம்முருகேசன், வீரமணி, தலைமை பொதுகுழு உறுப்பினர்கள் நடராஜ், துரைசாமி சோலைமணி நகர மன்ற தலைவர் லட்சுமி மாது நகர நிர்வாகிகள் அழகுவேல், முல்லைவேந்தன், கோமளவல்லி ரவி, சுருளிராஜன்,முன்னாள் நகர கழக செயலாளர் அன்பழகன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் இளைய சங்கர், பெரியண்ணன், பொன்மகேஸ்வரன், ராஜி, ராஜா மற்றும் துணை அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், நகர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முன்னாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் , ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் திமுக முன்னோடிகள், என பலரும் பெருந்திரலாக கலந்து கொண்டனர்
Next Story