ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் அரண்மனை முன்பு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சட்டமேதை அம்பேத்கரை அவமதித்து பேசியதாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினரும், நகராட்சி உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதிபாலன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் ராமலெட்சுமி, நகர் தலைவர் கோபி, வட்டார தலைவர் காருகுடி சேகர், வழக்கறிஞர் அன்புச்செழியன் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Next Story