வழிப்பறி கொள்ளையன் மீது குண்டாஸ்

வழிப்பறி கொள்ளையன் மீது குண்டாஸ்
திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் மீது குண்டாஸ் பாய்ந்தது
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம், கதிரையன்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்(36) இவர் மீது மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 25-க்கும் மேற்பட்ட வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் பேருந்து நிலையம் அருகே இந்திரகுமார் என்பவரிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட போது நகர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ராஜசேகரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்பி பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பூங்கொடி அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் ராஜசேகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story