திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்.
Dindigul King 24x7 |20 Dec 2024 4:11 AM GMT
அமித்ஷா வேடம் அணிந்தவரின் கைகளை சங்கிலியால் கட்டி, செருப்பு மாலை அணிவித்து, அவரின் தலையில் கூட்டு வைத்து திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் அவமரியாதையாக பேசியதை கண்டித்து இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காங்கிரசார் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கண்டன உரையாற்றிய திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் தான் எங்களுக்கு கடவுள் என்று கூறினார். தொடர்ந்து "108 முறை அம்பேத்கர் புகழ் ஓங்குக" என்று கோஷமிட்டனர். பின்னர் அமித்ஷா வேடமடைந்த நபரின் கைகளை சங்கிலியால் கட்டி, அவருக்கு செருப்பு மாலை அணிவித்து, அவரது தலையில் அனைவரும் குட்டு வைத்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மொழிப்போர் தியாகி ஐயா ராமு ராமசாமி, திண்டுக்கல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார், மேற்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, பொது கணக்கு குழு உறுப்பினர் சிவாஜி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வேங்கை ராஜா, திண்டுக்கல் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், மாமன்ற உறுப்பினர் பாரதி, மகிளா காங்கிரஸ் தெற்கு பகுதி செயலாளர் நாகலட்சுமி, திண்டுக்கல் மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் காளிராஜ், ஜோதி ராமலிங்கம், காஜாமைதீன், நிக்கோலஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story