கண்மாய் நிரம்பி மீன்கள் வெளியே துள்ளி குதிக்கும் நிலையில் அதைப் பிடித்து மகிழும் பொதுமக்கள்
Virudhunagar King 24x7 |20 Dec 2024 4:35 AM GMT
கண்மாய் நிரம்பி மீன்கள் வெளியே துள்ளி குதிக்கும் நிலையில் அதைப் பிடித்து மகிழும் பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மழையில் காரணமாக கண்மாய் நிரம்பி மீன்கள் வெளியே துள்ளி குதிக்கும் நிலையில் அதைப் பிடித்து மகிழும் பொதுமக்கள் ... தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்திலும் பெய்த மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பியது .இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சோழன்குளம் கண்மாய் நிரம்பியது. நிரம்மிய நீரானது தடுப்பு சுவரை தாண்டி மறுகால் பாயும் நிலையம் அதன் வழியாக மீன்கள் துள்ளி குதிக்கின்றன. அந்த மீன்களை அப்பகுதி மக்கள் வலை போட்டு பிடித்து மகிழ்கின்றனர்.
Next Story