மதுரை அருகே பிளஸ் ஒன் மாணவி மாயம்

மதுரை அருகே பிளஸ் ஒன் மாணவி மாயம்
மதுரை அருகே பிளஸ் ஒன் மாணவி மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள ஆலம்பட்டியில் வசிக்கும் கருப்புசாமி என்பவரின் 16 வயது மகள் ஆலம்பட்டியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 17ஆம் தேதி காலை 9 மணிக்கு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் மாலையில் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் மற்றும் நண்பர்களில் வீடு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (டிச.19) மதியம் இவரது தாயார் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்கள்.
Next Story