குமரி : அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கலந்தாய்வு கூட்டம்

குமரி : அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கலந்தாய்வு கூட்டம்
X
கன்னியாகுமரியில்
கன்னியாகுமரி தனியார் விடுதியில் கன்னியாகுமரி மாவட்டம் உட்பட   5 மாவட்டங்களை சேர்ந்த கேபிள் டிவி தனிவட்டாட்சியர்கள் மற்றும் தமிழ்நாடு கேபிள் மற்றும் தொழிலாளர் நல வாரிய தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.வைத்தியநாதன்  தலைமை வகித்தார். தொடர்ந்து  அவர்  அலுவலர்களிடையே தெரிவித்ததாவது:-  தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அரசு கேபிள் பொதுமக்களுக்கு தனியார் கேபிள் இணைப்புக்கு இணையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் வினியோகம் செய்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இணைப்புகளை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உள்ளுர் கேபிள் உரிமையாளர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கண்டு நீதிமன்றங்களில் வழக்குகள் இருப்பின் அது குறித்து தக்க விளக்கம் அளிக்க வேண்டுமென   தெரிவித்தார்.   கூட்டத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி மற்றும் தொழிலாளர் நல வாரிய தலைவர் ஜோ.ஜீவா, கேபிள் டிவி தனி வட்டாட்சியர்கள், பொது மேலாளர், ராமநாதபுரம், திருநெல்வேலி,  தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட அரசு கேபிள் டிவி துணை மேலாளர்கள், டிஜிட்டல் சிக்னல் டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டார்கள்.
Next Story