சிவகங்கை நகராட்சியில் தலைவர், துணைத் தலைவர் மோதல்

X
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சியில் நேற்று(டிச.19) நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த்(திமுக) தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்கிய உடன் தீர்மானம் குறித்து விவாதம் தொடங்கியது அப்போது தீர்மானங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பாக உள்ளதாகவும் ரூபாய் 70 லட்சத்திற்கும் மேல் முறை கேடு நடந்துள்ளதாக கூறி நகர மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன்(திமுக) மற்றும் ஏழாவது வார்டு கவுன்சிலர் துபாய் காந்தி(திமுக) ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். அதனை தொடர்ந்து தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று 1-வது வார்டு கவுன்சிலர் மகேஷ்(காங்கிரஸ்) விவாதித்தார் அப்போது மகேஷை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மன்ற தலைவரின் மகன் உட்பட அவரது ஆதரவாளர்கள் மகேஷ் தாக்கியுள்ளனர் இந்நிலையில் கூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளியே நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

