சிவகங்கையில் தொடரும் கொலை சம்பவங்கள் பொதுமக்கள் அச்சம்

சிவகங்கையில் தொடரும் கொலை சம்பவங்கள் பொதுமக்கள் அச்சம்
X
சிவகங்கையில் பூக்கடைக்காரரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றார்கள்
சிவகங்கை மாவட்டம், வாணியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(21). இவர் சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே பூக்கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. வெங்கடேசன் தினந்தோறும் இரவு 10 மணி அளவில் கடையை அடைத்து விட்டு தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று(டிச.19) வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு வெங்கடேசன் மற்றும் அவரது தாயார் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வாணியங்குடி ஆர்ச் அருகே சென்றபோது காரில் வந்த மர்ம கும்பல் இவர்களின் இரு சக்கர வாகனத்தை இடித்து தள்ளினர். பின்னர் காரில் இருந்து இறங்கிய கும்பல் வெங்கடேசன் மற்றும் அவரது தாயாரை சராமாரியாக வெட்டினர். இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் தாயார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story