மத்திய அமைச்சரை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்

பென்னாகரம் அம்பேத்கர் சிலை அருகில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்
.நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து இழிவாக பேசியதை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் இன்று டிசம்பர் 21 காலை 11 மணியளவில் பென்னாகரம் அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு. பென்னாகரம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். தருமபுரி மாவட்ட செயலாளர் முருகன் அவர்கள் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார் அவர் புகழ் வாழ்க. மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒழிக. உடனடியாக பதவி விலகு என ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.
Next Story