ராமநாதபுரம் விடுதலை சிறுத்தை கட்சியினர் ரயில் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |20 Dec 2024 7:32 AM GMT
ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பு மறியல் செய்ய முற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 50 பேர் கைது
ராமநாதபுரம் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை, இழிவாக பேசிய உள்துறை அமைச்சர்அமித்ஷா அவர்களை பதவி விலக வலியுறுத்தி, ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இரயில் மறியல் போராட்டம்நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்டச் செயலாளர் தே. அற்புதக்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் ரமே. பிரபாகர் தலைமை தாங்கினார்கள். மாவட்டப் பொருளாளர் பாண்டித்துரை, மாவட்டத் துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன் மனோகரன், செய்தி தொடர்பாளர் சத்யராஜ் வளவன், தொகுதி செயலாளர் பழனிக்குமார், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணைச் செயலாளர் பாக்கிய ஜோதி, திருவாடானை ஒன்றிய செயலாளர் ஞானசௌந்தரி, பாராளுமன்ற தொகுதிச் செயலாளர் கோவிந்தராஜ், மண்டல துணைச் செயலாளர் விடுதலை சேகரன் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள். திருவாடனை ஒன்றிய செயலாளர் குமார், பரமக்குடி ஒன்றிய செயலாளர் இப்ராஹிம், மண்டபம் ஒன்றிய செயலாளர் காளிதாஸ், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் சபீர், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ரவிவளவன், விவசாய பாதுகாப்பு இயக்கம் மாவட்ட அமைப்பாளர் குமார் முதுகுளத்தூர் ஒன்றிய அமைப்பாளர் மாரி கண்ணன், சமூக ஊடக மையம் மேகலைவன் திருவாடானை ஆரோக்கிய சுரேஷ்குமார், ஜார்ஜ், ராசு யாகப்பன், சிவா மகளிர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த போதும் பொண்ணு, அந்தோணியம்மாள்டெய்சி உட்பட விடுதலை சிறுத்தைகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story