பக்தர்கள் காணிக்கை
Erode King 24x7 |20 Dec 2024 7:38 AM GMT
கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியலில் ரூ.11.50 லட்சம் பக்தர்கள் காணிக்கை தங்கம், டாலர்களும் குவிந்தது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் புகழ்பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் அமர பன்னீஸ்வரர் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில் அங்காளம்மன் கோவில் என 11 உண்டியல்கள் உள்ளன. 4 மாதங்களுக்கு பிறகு பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் அருண்குமார், செயல் அலுவலர் அனிதா, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கோமதி முன்னிலையில் உண்டியல் எண்ணம் பணி நடந்தது. கோபியை சேர்ந்த பி.கே. ஆர் கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.11 லட்சத்து 56 ஆயிரத்து 101 -ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதைப்போல் 50 கிராம் தங்கம், வெள்ளி 214 கிராம், 37 அமெரிக்க டாலர், 50 சிங்கப்பூர் டாலர், 20 யூரோ என பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர்.
Next Story