ஜெயங்கொண்டம் அருகே காலனி மக்களின் சாமி ஊர்வலம் மற்றொரு சமூக மக்களுடன் பிரச்சனை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தடுத்து நிறுத்திஅமைதி பேச்சு வார்த்தை நடத்தவும் போலீசார் நடவடிக்கை

X
அரியலூர், டிச.20- அரியலூர் மாவட்டம் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் காலனி தெருவில் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காலனி தெருவில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் புதிதாக வாங்கப்பட்ட ஐயப்பன் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அப்பகுதி பொதுமக்கள் திட்டமிட்டனர். சாமி ஊர்வலம் காலனி தெருவில் இருந்து புறப்பட்டு மெயின் ரோட்டில் உள்ள குமுிலங்குழி ஏரியில் ஐயப்ப பக்தர்கள் நீராடி கரகம் ஜோடித்து அங்கிருந்து மற்றொரு சமூக மக்கள் வசிக்கக்கூடிய முக்கிய சாலை வழியாக முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து மீண்டும் காலனி தெருவிற்கு வருவது என திட்டமிட்டு இருந்தனர். இதனையடுத்து நேற்று மாலை 6:00 மணி அளவில் ஐயப்பன் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் தலைமையிலான உடையார்பாளையம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காலனி தெரு முடிவடையும் இடத்திலேயே ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் தற்போதும் காலனி தெரு மக்களின் சாமி ஊர்வலம் மற்றொரு சமூக மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகள் வழியாக சென்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பதால் போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.ஆனால் காலனி தெரு மக்களின் சாமி ஊர்வலத்திற்கு மற்றொரு சமூக மக்கள் யாரும் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .இதனையடுத்து அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இன்று மாலை உடையார்பாளையம் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

