படகு, வலை சேதமான மீனவருக்கு நிதி உதவி
Tiruvallur King 24x7 |20 Dec 2024 11:44 AM GMT
படகு, வலை சேதமான மீனவருக்கு நிதி உதவி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பழவேற்காடு வைரங்குப்பத்தை சேர்ந்த மீனவர் இளங்கோ. சக மீனவர்கள் 4 பேருடன் கடந்த 16ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றபோது ராட்சத அலையில் படகு கவிழ்ந்ததில் படகில் இருந்த இளங்கோ மற்றும் சக மீனவர்கள் 4 பேரும் நீந்தி கரை வந்து உயிர் தப்பினர். இதில் மீன்பிடி பைபர் படகு, வலை சேதமானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர் இளங்கோவிற்கு திருவொற்றியூர் கே.வி.கே குப்பத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில மீனவரணி திமுக துணை தலைவர் கே.பி.சங்கர் எம்எல்ஏ மாநில மீனவர் அணி சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அப்போது, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் பழவை அலவி மற்றும் வைரங்குப்பம் கிராம நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story