தலைமை ஆசிரியையை கண்டித்து துப்புரவு பணியாளர் போராட்டம்
Nagercoil King 24x7 |20 Dec 2024 12:03 PM GMT
கன்னியாகுமரி
கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஸ்ரீமதி என்பவர் துப்புரவு பணி செய்து வருகிறார். இவரை பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலின் என்பவர் ஒருமையில் பேசி வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீமதிக்கு வழங்கப்பட்ட இருக்கையை பள்ளியிலிருந்து அப்புறப்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஶ்ரீமதியின் மகனுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடத்த வேண்டி இருந்தது. அப்போது ஸ்ரீமதி தனக்கு விடுமுறை வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளார். ஆனால் விடுமுறை வழங்காமல் ஸ்ரீமதி வழங்கிய விடுப்பு ப்படிவத்தை தலைமை ஆசிரியை. கிழித்தெறிந்ததாக கூறப்படுகிறது. தான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் இது போன்று தன்னிடம் அவமரியாதை நடந்து கொள்வதாக ஸ்ரீமதி புகார் தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஸ்ரீமதி பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று இன்று (20-ம் தேதி) ஸ்ரீமதி மற்றும் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர்.
Next Story