வணிகர் சங்கத்தின் மாவட்ட இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்!
Namakkal (Off) King 24x7 |20 Dec 2024 12:28 PM GMT
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்ற மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளரும், பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவருமான R.K.சண்முகவேல், மாநில அளவில் இளைஞர் அணியை ஒருங்கிணைப்பது, மாவட்ட, மாநகர மற்றும் வட்டாரங்களுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது, புதிய உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.தொடர்ந்து பேசிய மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர் அணியை வலுப்படுத்த, இளைஞர்கள் அனைவரும் சாதி, மதம், இனம், மொழி, அரசியல் கடந்து பேரமைப்பில் உறுப்பினராக இணைந்து வணிகம் வளர்க்கவும், வணிகர்களை காக்கவும் முழு ஒத்துழைப்பு வழங்கி ஆதரவு தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கூட்டத்தில் ஈரோடு இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ், நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராயல் பத்மநாபன் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story