நாமக்கல்: மத்திய அமைச்சரை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாமக்கல் மையம் மாவட்ட செயலாளர் நீலவானத்து நிலவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டி நாமக்கல் பூங்கா சாலையில் மண்டல ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நாமக்கல் மையம் மாவட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டியம் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாமக்கல் மையம் மாவட்ட செயலாளர் நீலவானத்து நிலவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பூங்கா சாலையில் நடைபெற்றது.இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன், குமணன்,காமராஜ், அரசன், நீதிநாயகம், ஆற்றலரசு, பழ.பாலு , இசையமுது ,வணங்காமுடி, பழக்கடை சக்திவேல், செல்அன்பு, கரிகாலன் , இரா.வசந்த் உள்ளிட்ட ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, அமித்ஷாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
Next Story