ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் காவல் ஆய்வாளர் செயல்படுவதாக கூறி ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

X
அரியலூர், டிச.20- ஜெயங்கொண்டம் அருகே ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் காவல் ஆய்வாளர் செயல்படுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் உள்ள காலணி தெருவில் நேற்று இரவு ஜயப்ப சாமி ஊர்வலம் நடத்தினர். இதை அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காலனி தெருமக்கள் நடத்திய சாமி ஊர்வலத்தை காலணி தெருவிழியே தடுத்து நிறுத்தி மற்ற சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாமி ஊர்வலம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கூறி சாமி ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தனர் இதனையடுத்து ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் தலைமையில் இன்று மாலை இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது பேச்சுவார்த்தையில் சாமி ஊர்வலம் நடத்த மற்ற சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் காலனி தெருமக்கள் சாமி ஊர்வலம் நடத்திக் கொள்ளலாம் என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது இந்நிலையில் உடையார்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உடனடியாக சாமி ஊர்வலம் நடத்த வேண்டாம் எனவும் சிறிது நாட்கள் கழித்து நடத்திக் கொள்ளலாம் என கூறியதால் அதிர்ச்சி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் வானதிரையன் பட்டினம் காலனி தெரு மக்கள் உடையார்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் இரு சமூக மக்களும் சாமி ஊர்வலம் நடத்தலாம் என ஒப்புக்கொண்ட நிலையில் காவல் ஆய்வாளர் சாமி ஊர்வலம் நடத்த தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது இதன் மூலம் அவர் ஜாதி கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story

