போத்தனூர் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் கட்ட தவறினால் இணைப்பு துண்டிப்பு.

X
Paramathi Velur King 24x7 |20 Dec 2024 8:57 PM ISTபோத்தனூர் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் கட்ட தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை.
பரமத்தி வேலூர், டிச.20- பொத்தனூர் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் கூறியிருப்பதாவது:- பொத்தனூர் பேரூராட்சியில் 2024-2025ம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமைக்கட்டணங்கள் இதுவரை செலுத்தாத பொதுமக்கள் நிலுவையின்றி உடன டியாக செலுத்திட வேண்டும். குடிநீர் பணம் செலுத்தாத பொது மக்களுக்கு பலமுறை அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டும். தற்போது வரை கட்டணம் செலுத்தாத குடியிருப்பு தாரர்களுக்கு வழங்கப்பட் டுள்ள குடிநீர் இணைப்பு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி துண்டிக்கப்படும். மேலும் சொத்து வரியினை அந்தந்த அரையாண்டிற்குள் செலுத்த தவறும் பட்சத்தில் அபராதத்துடன் செலுத்த நேரிடும். எனவே பொத்தனூர் பேரூராட்சி பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு கட்டணங்களை நிலுவையின்றி செலுத்தி பேரூராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
Next Story
