சிறப்பு அலங்காரத்தில் தெய்வானை.

மதுரை திருப்பரங்குன்றத்தில் உற்சவர் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் எண்ணெய் காப்புத் திருவிழா கடந்த 17 ம் தேதி தொடங்கியது. இத்திருவிழாவின் நான்காவது திருநாளான இன்று (டிச.20) உற்சவர் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வணங்கி சென்றனர்.இத்திருவிழா நாளையுடன் முடிவடையவுள்ளது. இந்நிகழ்வின் முடிவில் தினமும் பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரமாதமாக வழங்கப்பட்டது.
Next Story